மரம் விழுந்து 6 கார்கள் சேதம்

 கோத்தா டாமன்சாராவில் மரம் விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (அக் 22) அதிகாலை 3.10 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் உள்ள ஜாலான் நூரி 7/3, செக்‌ஷன் 7 இல் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.

மரம் முறிந்து விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,  குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் போது எவரும் காயமடையவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here