புத்ராஜெயா:
இன்று தொடங்கியுள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு சோதனை முறையின் மூலம், குடியுரிமை விண்ணப்பத்திற்கான தேசிய பதிவுத் துறையின் (NRD) செயலாக்க காலம் 73 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மலேசியக் காவல்துறையுடன் இணைந்து தேசிய பதிவுத் துறை உருவாக்கிய இந்த புதிய முறையை செயல்படுத்துவதன் மூலம், விண்ணப்பத்திற்கான செயலாக்க நேரம் மிகவும் திறமையான முறையில் கையாளப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
“இதற்கு முன், தேசிய பதிவுத் துறையால் பெறப்பட்ட குடியுரிமை விண்ணப்ப ஆவணங்கள் காவல்துறைக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களாக சமர்ப்பிக்கப்படும், ஆனால் இந்த முறையின் மூலம், ஆவணங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படும்,” என்று அவர் திணைக்களத்தின் 75 வது ஆண்டு விழாவின் பின்னர் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஆபத்தான மற்றும் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நிறுவனத்துடன் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தால், கணினி தானாகவே குறித்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் என்று அவர்மேலும் கூறினார்.