சிலாங்கூரின் புதிய சபாநாயகராக லா வெங் சான் நியமனம்

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநில சட்டசமன்ற சபாநாயகராக முன்னாள் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் மூலம் 45 வயதான DAPயின் லாவ், மாநிலத்தின் 12வது சபாநாயகராகிறார்.

அவரது நியமனம் இன்று செவ்வாய்கிழமை (செப்டம்பர் 19) சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த பதவிக்கு இருவர் போட்டியிட்டதால், பேரவை செயலாளர் ஜே.காயத்திரி பிரசேனா தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பான் லாவையும், பிகேஆர் புக்கிட் அந்தரபாங்சா சட்டமன்ற உறுப்பினர் கம்ரி கமருடினையும் துணை சபாநாயகராகவும் முன்மொழிந்தனர்.

அதேநேரத்தில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் , சபாநாயகர் பதவிக்கு PAS இன் டாக்டர் முகமட் ஃபுவாட் சாலேயையும் துணை சபாநாயகாராக சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் ஷாஃபி நகாவை பரிந்துரைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாவ் இந்த நியமனத்தை தொடர்ந்து, காம்ரி துணை சபாநாயகராகவும் பதவியேற்றார். அத்தோடு மாநிலத்தின் 56 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய சபாநாயகர் முன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here