பாதங்களில் இந்த அடையாளங்களைக் கொண்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.

ஒவ்வொருவரின் உடலும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். அதோடு ஒருசில அடை யாளங்களையும் கொண்டிருக்கும். இப்படி உடலில் காணப்படும் ஒருசில அறிகுறிகள் அந்நபரின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை சொல்லும் என்பது தெரியுமா?

அதுவும் எப்படி கைகளில் உள்ள ரேகைகளைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் பாதங்களில் காணப்படும் சில அறிகுறிக ளும் அந்நபரின் எதிர்காலத்தை பற்றி கூறும்.

குறிப்பாக பாதங்களில் இருக்கும் ஒருசில அடையாளங்கள், பாதங்களின் வடி வங்கள் மற்றும் நிறம் போன்றவை, அந்நபர் அதிர்ஷ்டசாலியா, வாழ்க்கையில் முன்னேற் றத்தைக் காண்பார்களா, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்களா என் பதைப் பற்றி தெரிவிக்கும். இப்போது பாதங்களில் எந்த மாதிரியான அடையாளங் களைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் காண்போம். உங்கள் பாதங் களிலும் உள்ளதா என்பதை பாருங்கள்.

பாதங்கள் உள்ள அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அடையாளங்கள் ஒருவரது பாதங்களில் பல்வேறு அடையாளங்கள் காணப்படும். அதுவும் ஒருவரது பாதங்களில் சூரியன், வில், சந்திரன், கலசம், தாமரை, சங்கு, மீன் அல்லது அம்பு போன்ற அடையாளங்கள் காணப்பட்டால், அது அந்நபருக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக இருப் பதாக ஜோதிடம் கூறுகிறது. இத்தகைய அடையாளங்களை பாதங்களில் கொண் டவர்களின் கையில் பணம் எப்போதும் நிலைத்திருக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

கால்விரல்களின் அமைப்பு ஜோதிடத்தின் படி, ஒருவரது கால்விரல்கள் வலது பக்கத்தில் வளைந்து அல்லது சீரானதாக இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். மேலும் இந்த நபர்கள் தங்கள் வாழ்க் கையில் அனைத்துவிதமான சுகபோகங்களையும் பெற்று, சந்தோஷமான வாழ்க் கையை வாழ்வார்கள்.

உள்ளங்கால் நிறம் உங்கள் உள்ளங்கால்கள் பிங்க் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ளதா? அப்படியானால் இத்தகையவர்கள் வாழ்க்கை மிகவும் செழிப்பாகவும், எதிலும் பஞ்சம் எதுவும் இருக்காது. இம்மாதிரியான பாதங்களைக் கொண்டவர்கள் பணிபுரிந்து வந்தால், அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மொத்தத்தில் இவர்கள் பணியிடத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். அழகிய பாதங் கள் ஒரு பெண்ணின் பாதங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்பவரின் வாழ்க் கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஒரு பெண்ணின் உள்ளங்கால் நடக்கும் போது தரையைத் தொடுமானால், அப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனை என்பதே வராது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here