ஒற்றுமை அரசாங்கத்தின் வீழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன் என்கிறார் பாஸ் MP

கோலாலம்பூர்:

ஒற்றுமை அரசாங்கத்தின் வீழ்ச்சிக்காக தாம் பிரார்த்தனை செய்ததாக பாஸ் கட்சியின் மூத்த MP ஒருவர் ஒப்புக்கொண்டதையடுத்து, இன்று மக்களவையில் அமளி துமளி ஏற்பட்டது.

அரசாங்கம் மனிதாபிமானமின்றி செயல்பட்டதாலும், மக்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைத்ததாகக் கூறப்பட்டதன் காரணமாகவே தான் அரசாங்கத்தின் “அழிவுக்காக பிரார்த்தனை செய்ததாக டத்தோ டாக்டர் நிக் முஹமட் ஜவாவி சாலே (PN-Pasir Puteh) “கூறினார்.

” நான் நினைக்கிறேன்… கடவுள் நாடினால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது, இந்த அரசாங்கம் விரைவில் அதன் முடிவை சந்திக்கும்,” என்று அவர் இன்று புதன்கிழமை (அக் 25) நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் 2024 விவாதத்தின் போது கூறினார்.

இத்தகைய கருத்துக்கள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தியதாக ராயர் குற்றஞ்சாட்டினார்.

லீ சுவான் கோவும் (PH-Ipoh Timur) முகமட் ஜவாவியின் அத்தகைய அறிக்கை தவறானது என்று கூறி, அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்றார்.

இருப்பினும், துணை சபாநாயகர் டத்தோ முகமட் ராம்லி முகமட் நோர் குறுக்கிட்டு, முகமட் ஜவாவி தனது அறிக்கையை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது ஜவாவி, அரசாங்கத்தின் மீது தனக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை என்றும், அரசாங்கத்தின் உணர்வுகளை “புண்படுத்த தான் முயற்சிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதனால் இன்று நாடாளுமன்றம் அல்லோல கல்லோலப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here