பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

கோலாலம்பூர்:

மெரிக்கா ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல் ஆட்சியின் கொடூரத்தைக் கண்டித்து, இன்று KLCC மசூதியிலிருந்து அமெரிக்கத் தூதரகத்திற்கு சென்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.’10K Solidarity Palestine’ என்ற பேரணியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேல் ஆட்சியின் மிருகத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

மேலும் இந்த அணிவகுப்பின் போது, பங்கேற்பாளர்கள் ‘அல்லாஹு அக்பர்’ என்றும் பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் என்றும் பல கோஷங்களையிட்டனர்.

கூட்டத்தில் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல், பெஜுவாங் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், பெர்சாத்து இளைஞர் தலைவர் வான் அகமட் ஃபைசல் வான் அகமட் கமால், பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here