சக நாட்டவரை 40 முறை கத்தியால் குத்தியதாக மியன்மார் ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு:

கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி கம்போங் மேலூரில் சக நாட்டவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு எதிராக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முகமட் சலாம் முகமட் ரஷீத், 32, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு தலைமை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இம்ரான் ஹமீத் முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, ​​அவர் குற்றச்சாட்டுப் புரிந்ததாக தலையசைத்தார்.

ஆனால் கொலைக் குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், மாவட்ட நீதிமன்றத்தில் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

​​குற்றச்சாட்டுகளின்படி, அக்டோபர் 17 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.15 மணி வரை, கம்போங் மேலூரில் நூருல் சலாம் முகமட் சாதிக் (44) என்ற நபரைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 கசையடிகள் வழங்க வழிசெய்கிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

வழக்கை மீண்டும் செவிமடுக்க ஜனவரி 31-ம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

கம்போங் மேலோர் லாமாவிலுள்ள ஒரு வீட்டில், ரோஹிங்கியா நபர் ஒருவர் மார்புப் பகுதி உட்பட 40 முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

இதில் சந்தேக நபரின் 29 வயதுடைய மனைவியுடன் பாதிக்கப்பட்டவருக்கு தகாத தொடர்பு இருந்ததாகவும், அதனாக ஏற்பட்ட காரணமாக பொறாமையே இந்த சம்பவத்திற்கு காரணம் என் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கவத்துறை முன்னர் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here