சனி வக்ர நிவர்த்தி. இன்று முதல் 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற் பட்டாலும், அது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

நவகிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.

இத்தகைய சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந் நிலையில் நவம்பர் 04 ஆம் தேதி, அதாவது இன்று சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

சனி வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப் படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் கெடுபலனையும் பெறலாம். ஆனால் வக்ர நிவர்த்தி அடையும் சனி கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருக் கவுள்ளார். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் நற்பலனைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முழுமையடையாமல் கிடக்கும் முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிவடையும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். ஷேர் மார்கெட்டில் இருப்பவர்கள் எந்த முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே செய்ய வேண்டும்.

உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப் படலாம். அரசு வேலையுடன் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலையைப் பொறுத்தவரை, நினைத்த காரியங்கள் நிறைவேறும். இக்காலத்தில் கூட்டு தொழில் செய்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.

வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இன்று முதல் 2025 வரை அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறு வார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் தைரியம் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

நண்பர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட வருமான ஆதா ரங்கள் உருவாகலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, புதிய வேலை தேடி வரும். பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறனை அனைவரும் பாராட்டுவார்கள்.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பரம்பரை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், சில அதிர்ச்சிகளை சந்திக்க நேரிடும். சிலர் வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். வேலையில் போட்டி இருக்கும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு சமமான வலிமையுடன் இருப்பார்கள்.

பணியிடத்தில் உயர் அதிகாரிகளை மகிழ்விக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சில் கசப்புகள் இருக்கும். இதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் பேச்சை கட்டுப்படுத்துங்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவ தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். திருமண வாழ்க்கையில் பதற்றம், வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு, நிதி விஷயங்களில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் உங்கள் நிம்மதியைக் கெடுக்கலாம். அதிர்ஷ்டம் ஆதரவாக இல்லாததை நன்கு உணர்வீர்கள்.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். குடும்பத்தில் அல்லது சமூகத்தில் மரியாதை இழக்க நேரிடும். மன உளைச்சல் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை குறித்து கவலை கொள் வீர்கள். எந்த கூட்டாண்மை வேலையையும் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத் தப்படுகிறது. யாரிடமும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்களின் வேலை பாராட்டைப் பெறும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ​​

ஜோதிடம், தந்திரம், மந்திரம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். திடீர் பணவரவு கூடும். சனி பகவானின் அருளால் எதிரிகளை அழிப் பீர்கள். பணியிடத்தில் கொடிகட்டிப் பறப்பீர்கள். உங்களின் தைரியம் கணிசமாக அதிகரிக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இமனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், சிறிய விஷயங்களில் விவாதத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் மன உளைச்சலை சந்திக்கலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வீட்டை மாற்ற வேண்டிய சூழர் ஏற்படும்.

வேலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், எந்த ஒரு பெரிய முடிவையும் கவனமாகச் சிந்தித்த பிறகே எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கையில் சோம்பல் அதிகரிக்கும். எந்த வித தக ராறிலும் ஈடுபட வேண்டாம் என்றும், நீதிமன்ற வழக்குகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ஊடகம், எழுத்து மற்றும் மக்கள் தொடர்பு உள்ளவர்கள் நல்ல புகழைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். தங்களின் அறிவுத் திறமையால் பல பெரிய இலக்குகளை அடைவார்கள்.

காதல் உறவுகள் வலுவடையும் மற்றும் உங்கள் காதலருடன் நல்ல உறவைத் தொடர முடியும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் காதலரை அறிமுகம் செய்வீர்கள். பரஸ்பர உறவுகளின் புரிதலும் அரவணைப்பும் அதிகரிக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வாழ்க்கை யில் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவது பற்றி யோசிக்கலாம். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற முயற்சித்தால் அதில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வணிகர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மத பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. உடன்பிறந்தவர்களுடன் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால் வரும் காலத்தில் முடிவுக்கு வரும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படலாம். பணியிடத்தில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

வெளிநாட்டு பயணங்கள் சில இலக்குகளை அடைய உதவும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். தாம்பத்திய வாழ்வில் சில டென்ஷன் வர வாய்ப்பு இருந்தாலும், தானாக சரியாகும். கூட்டுதொழில் தொடங்க நினைத்தால், நல்ல பலனைப் பெறலாம். நன்கு சேமிக்க முடியும். சகோதரர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக செலவுகள் மற்றும் தேவையற்ற பயணங்களால் சிரமப் படுவார்கள். தொழில் ரீதியாக நன்றாக இருக்காது. நீண்ட நாட்களாக வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் அதை செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் புதிய வேலை கிடைக்காமல் அவதிப்படக்கூடும்.

உறவுகளில் தவறான புரிதல்களையும் பதற்றத்தையும் உருவாக்கும். உங்கள் வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படாது, இதனால் சில ஏமாற்றங்களை உங்கள் வாழ்க்கை யில் சந்திப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here