கொரோனாவுடன் கை கோர்தது புதிய ‘ஹண்டா’ வைரஸ் ! பீதியில் சீனா

ஹண்டா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஹண்டா வைரஸ் என்ற புதிய தொற்றால் ஒருவர் உயிரிழந்திருப்பது சீன மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகெங்கிலும் உள்ள 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் இறந்துள்ளனர். இதில், இத்தாலி, சீனா நாடுகளுக்கு அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சீன மக்களை இன்னொரு புதிய வைரஸ் பீதியைக் கிளப்பியுள்ளது.

ஹண்டா வைரஸ்

இந்நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்திலிருந்து ஷடாங் மாகாணத்திற்குப் பேருந்தில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் திடீரென இறந்தார். இவரைச் சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பேருந்தில் பயணித்த 32 பேரையும் மருத்துவர்கள் சோதித்தனர். இந்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும், ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன. நியூ ஓர்லியன்ஸ் பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹண்டா’ வைரஸ்

ஹண்டா எனும் வைரஸ் எலியைத் தாக்கும். இந்த வைரஸ் மற்ற விலங்குகளைத் தாக்காது. ஆனால் மனிதனை மிக எளிதாகத் தாக்கும் என கூறப்படுகிறது. எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்குப் பரவும். ஹண் டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றதே. தொடக்கத்தில் இதன் அறிகுறியாகக் காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி ஆகியவையாக இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரஸும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here