கோத்தா பாரு:
மனிதவள அமைச்சு மற்றும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று கிளாந்தான் மாநிலத்தில் கோத்தா பாருவில் மக்கள் சந்திப்பு நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பின்னர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நேர்மான் யாயா குடும்பத்திற்கு சொக்சோ நிறுவனத்தின் மூலம் மாதம் தோறும் 2,811 வெள்ளி நிதியுதவி உறுதி கடிதத்தை மனித வள அமைச்சர் சிவகுமார் வழங்கினார்
மேலும் குறித்த குடும்பத்திற்கு மரண சகாய நிதியாக 2,000 வெள்ளியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.