மூடா தலைவர் சைட் சாதிற்கு 7 ஆண்டுகள் சிறை: 10 மில்லியன் அபராதம்

 கிரிமினல் நம்பிக்கை மீறல் (CBT), சொத்துக்களை முறைகேடு செய்தல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூவார்  நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM10 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அசார் அப்துல் ஹமீட், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், CBT குற்றச்சாட்டிற்காக ஒரு பிரம்படி தண்டனையையும் விதித்தார்.

பெர்சத்துவின் இளைஞர் பிரிவுக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரித்ததற்காக சைட் சாதிக்கிற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு பிரம்படி தண்டனை என உயர்நீதிமன்ற நீதிபதி மேலும் தீர்ப்பளித்தார். இந்த இரண்டு தண்டனைகளும் தொடர்ச்சியாக இயக்கப்பட வேண்டும். அதாவது அவர் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பணமோசடி செய்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 5 மில்லியன் ரிங்கிட் அபராதமும் அசார் விதித்தார். ஆனால், இந்த இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க அசார் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here