இல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் விரைந்து பதிந்து கொள்ளுங்கள்!

கோத்தா பாரு:

ல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் அதிகமானோர் விரைந்து பதிந்து கொள்ளும்படி மனித வள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரம் இல்லத்தரசிகள் பதிந்து கொண்டுள்ளனர்.இந்த திட்டத்திற்காக அரசு இரண்டு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு அரசு ஐந்து கோடி ஒதுக்கப்பட்ட இருக்கும் வேளையில் 4 லட்சம் இல்லத்தரசிகள் பயன் அடைவார்கள் என்று அவர் சொன்னார்.

இருப்பினும், இல்லத்தரசிகள் மத்தியில் இந்த விழிப்புணர்வு மிக குறைவாகவே இருக்கிறது. இத்திட்டத்திற்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் சொக்சோ அகப்பக்கத்தில் அல்லது சொக்சோ அலுவலங்களில் நேரடியாக சென்று பதிந்து கொள்ளலாம் என்று, நேற்று கிளாந்தான் கோத்தா பாருவில் மனித வள அமைச்சின் கீழ் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here