சென்னை:
இலங்கை, சிங்கப்பூருக்கு சென்னையில் இருந்து சொகுசுக்கப்பல் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கும் லிட்டோரல் குரூஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது.
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு, திரிகோணமலை, மாலத்தீவு, விசாகப்பட்டினம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சொகுசுக்கப்பல் இயக்கப்பட உள்ளதாக துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் திரு. சுனில் பாலிவால் தெரிவித்தார்.
இந்த சொகுசு கப்பலில் 1,200 பேர் பயணம் மேற்கொள்ள இயலும் என்றும் அனைத்து விதமான சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்ற வகையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 30 பயணிகள் வரை செல்லக்கூடிய சொகுசுக் கப்பல்கள் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், இத்தகைய நடவடிக் கையின் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதி கரிக்கும் என்றார்.