பெர்மிம் தலைவராக ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் போட்டியின்றி தேர்வு

ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன்

பெர்மிம் பேரவையின் தலைவர் பதவியை ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பெர்மிம் துணைத்தலைவருக்கு அஸ்ரின் அன்வர் அலி மற்றும் ஷாஹுல் ஹமீது இடையிலே நேரடி போட்டி நிலவுகிறது.

பெர்மிம் என்ற மலேசிய  இந்திய முஸ்லிம் பேரவை தொடங்கி இந்த வருடம் 50 ஆண்டை நிறைவு செய்கிறது. வருகின்ற ஞாயிற்று கிழமை பெர்மிமின் 21 ஆம் பேராளர் மாநாடு ஜலான் இல்முவில் அமைந்துள்ள மாஷா பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெற இருக்கிறது. இவ்வாண்டு தேர்தல் ஆண்டு என்பதால் அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று  நடைபெற்றது.

இதில் நடப்பு தலைவர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் போட்டிக்கு அஸ்ரின் அன்வர் அலி மற்றும் ஷாஹுல் ஹமீது இடையிலே நேரடி போட்டி நிலவுகிறது. உதவித் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்த கலிருஸ்ஸமான், முஹம்மது ஆரிப் , முஹம்மது அலீம், முஹம்மது ரிஸ்வான் மற்றும் முஹம்மது அலி ஜின்னா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்த ஆதம் மாலிக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்த ஷேக் ஜமீல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு முஹம்மது அரிபின், ஜமீல், ஹுசைன், புர்ஹானுதீன் , மஹ்பூஸ் காவாரிஸ்மி, ஹபீப் ரஹ்மான் மற்றும் உமர் பாரூக் இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தல் ஆணைய தலைவர் டத்தோ ஜமருல் கான்

இதனிடையே இந்த தேர்தலில் போட்டியிட கொடுத்த காலக்கெடு கடந்த பிறகு தலைவருக்கும் மற்றும் பொருளாளருக்கும் போட்டியிட விண்ணப்பம் வந்தது. தேர்தலின் விதிகளின்படி அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணைய தலைவர் டத்தோ ஜமருல் கான் நிராகரித்தார். தேர்தலில் போட்டிகள் இருப்பது சிறப்பான விஷயம். ஆனால் அப்போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய தலைவர் டத்தோ ஜமருல் கான் கேட்டுக் கொண்டார்.

1973 இல் 11 இணைப்பு சங்கங்களின் கூட்டமைப்பாக தொடங்கப்பட்ட பெர்மிம், இன்று 60க்கும் மேற்பட்ட இணைப்பு சங்கங்களை கொண்ட பேரியக்கமாக, இந்திய முஸ்லிம்களின் தேவைகளுக்காக குரல் கொடுக்கும் தாய் சபையாக சிறப்பான சேவையாற்றி வருகிறது. ஐம்பது ஆண்டுகளில் 10 தலைமைத்துவ மாற்றங்களை கண்டுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் உள்ள இளைஞர்கள் இந்த பேரவையில் இணைந்து காலத்திற்கேற்ப திட்டங்களை வரையறுத்து அமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பேராளர் மாநாட்டில், தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட்டு, கலந்து கொள்ளும் பேராளர்களால் பெர்மிமின் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு வரும் 19 நவம்பர் 23 ஜலான் இல்முவில் அமைந்துள்ள மாஷா பல்கலைக்கழக உள்ளரங்கில் பேராளர் மாநாடு பெர்மிமின் அரசியலமைப்பு படி, ஜனநாயக முறைப்படி நடைபெறவுள்ளது என்று பெர்மிமின் தலைவர் ஷேக் பரிதுத்தீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here