காசாவில் உள்ள மலேசியர் ரஃபா எல்லை வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்

புத்ராஜெயா:

நூருல் ஐன் ஹரோன் எனும் மலேசியர் தனது பாலஸ்தீன கணவருடன் காஸாவின் மோதல் பகுதியில் இருந்து நேற்று நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை மலேசிய நேரப்படி 2:23 அதிகாலை ரஃபா எல்லைக் குறுக்கு வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டார்.

நூருல் ஐனும் அவரது கணவரும் ரஃபா எல்லைக் கடவைக்கு வந்தவுடன், அவரை பிரத மர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோர் தொடர்பு கொண்டு அவர்களின் நலன் குறித்து விசாரித்ததாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 23 அன்று எகிப்து பயணத்தின் போது பிரதமருக்கும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசிக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, கெய்ரோவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் அம்மானில் உள்ள மலேசியத் தூதரகம் ஆகிய வற்றின் ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து இந்த வெளியேற்றம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கெய்ரோவில் உள்ள மலேசிய தூதரகமும் அவர்களுக்கு தகுந்த தூதரக உதவிகளை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் மலேசியாவுக்கு அளிக்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் முன்னுரி மைக்காக எகிப்து அரசு, கத்தார் அரசு, கோலாலம்பூரில் உள்ள எகிப்து தூதரகம் மற் றும் கோலாலம்பூரில் உள்ள கத்தார் தூதரகம் ஆகியவற்றுக்கு வெளியுறவு அமைச்சகம் தனது உயர்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here