இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவரும் அவரது குடும்பத்தினரும் தீபாவளியைக் கொண்டாடிய போட்டோ இணை யத்தில் பெரிய அளவில் வைரலானது. இதைத் தாண்டி அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஒரு நெக்லஸ் பெரும் வைரலானது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி இருவரும் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது ரிஷி சுனக் பதவியேற்றி நாளில் இருந்து அவரது வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் வைத்து புரிந்துகொண்டோம். ரிஷி சுனக் மற் றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் இந்திய பணத்திலும் பல கோயில்களுக்குச் சென் றனர். இன்த நிலையில் இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியின் போது குடும்பத்துடன் கொண்டாடியது மட்டும் அல்லாமல் அக்ஷதா மூர்த்தி மற்றும் இரு பிள்ளைகளும் இந்திய உடையில் தீபத்தை ஏற்றி கொண்டாடினர்.
கந்த பெருண்டா அல்லது பேருண்டா என்பது இந்து புராணங்களில் இரண்டு தலைகள் கொண்ட பறவை மற்றும் இது விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகிறது. இந்தக் கந்தபெருண்டா தென்னிந்தியாவைக் குறிப்பாக அக்ஷதாவின் சொந்த மாநிலமான கர் நாடகாவை ஆண்ட பல பேரரசுகளின் அதிகாரப்பூர்வ சின்னமாகப் பயன்படுத்தினர்.