9,120 கிலோ சட்டவிரோத பன்றி இறைச்சியைக் கைப்பற்றியது திரெங்கானு கால்நடை துறை

கோலா திரெங்கானு:

கடந்த வியாழக்கிழமை, பண்டார் பெர்மைசூரி, செத்தியூவில் உள்ள ஒரு உரிமம் பெற்ற இறைச்சிக் கூடத்தில் வெட்டப்படாத மொத்தம் 9,120 கிலோகிராம் பன்றி இறைச்ச்சியை திரெங்கானு கால்நடை சேவைகள் துறை (DVS) கைப்பற்றியது.

கைப்பற்றப்பட்டதில் 228 பன்றி சடலங்கள் மற்றும் 29 பெட்டிகள் பன்றியின் உறுப்புகள் இருந்தன, இதன் மொத்த மதிப்பு RM246,240 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதன் இயக்குனர் டாக்டர் அனுன் மான் தெரிவித்தார்.

“விலங்குகள் (படுகொலை கட்டுப்பாடு) விதிகள் 2009 இன் விதி 5 (3) இன் படி இவை பறிமுதல் செய்யப்பட்டது, இச்சட்டத்தின் கீழ் DVS ஆல் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி வெட்டும் (சசாப்பு) கூடங்களில் வெட்டப்படாத எந்த விலங்குகளின் இறைச்சியை யாரும் விற்கவோ, விற்பனைக்காகவோ அல்லது வைத்திருக்கவோ முடியாது என்றார் அவர்.

இது தொடர்பில் கண்டெய்னர் லோரியின் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்ட்னர் என்றும், இவை தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதால் காரணமாக, DVS உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் படுகொலை செய்யப்படாத விலங்குகளின் சடலங்கள் அல்லது இறைசசிகள் கடத்தப்படுவதை DVS தீவிரமாக கவனித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here