புத்ரா ஜெயா,
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புத்ரா ஜெயா டத்தாரானில் மிகப்பெரிய அளவில் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கி ளோட்டப் போட்டி நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற இந்த போட்டியை மனித வள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மலேசியர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் இந்த போட்டியை சொக்சோ மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்ததை அமைச்சர் சிவகுமார் வெகுவாக பாராட்டினர
இன்று சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓட்டப்பந்தய மற்றும் சைக் கிளோட்டப் போட்டியால் புத்ரா ஜெயா டத்தாரான் விழாக்கோலம் பூண்டது.