அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம்

கோலாலம்பூர்,
அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற ஆரூடங்கள் நாளுக்கு நாள்  வலுத்துவருகின்றன. இந்நிலையில் விரைவில் அமைச்சரவையில் பெரிய மாற்றத்தைச் செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது என்று மலேசியா கினி நேற்று செய்தி வெளியிட்டது.

சில அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களை மாற்றுவது உட்பட அமைச்சரவை யில் மாற்றம் செய்ய அன்வார் தயாராகி வருவதாகப் பிரதமர்துறைக்கு அணுக்கமான ஒரு வட்டாரத்தை 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் அரசுக்கு எதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் போதிலும் அரசா ங்கம் இன்னும் வலுவுடன்தான் உள்ளது.

சபாவிலும் ங்ரவாக்கிலும் ஆட்சி நிர்வாகம் வலுவுடன் இருக்கின்றது. 12ஆவது மலேசியத் திட்டம், அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், ஆள்பலக் கொள்கை, வாழ்க்கைச்  செலவினம் சம்பந்தப்பட்ட சில முக்கிய கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புக்காட்ட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் என்றும் அந்த வட்டாரம் கூறியது.

ஆகவே அன்வார் அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளார் என்றும் அந்த வட்டாரம்
மேலும் தெரிவித்தது. சிறப்பாகச் செயல்படாத அமைச்சர்களை மாற்றுவதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற ஆரூடங்கள் பரவி இருப்பதாக இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here