ஷா ஆலம்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் தனது பதவியை தற்காக்கப் போவதில்லை என்று பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
பெர்சத்துவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அவர் பிரதிநிதிகளிடம், “விட்டு கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று கூறினார். கூட்டத்திலிருந்து “வேண்டாம்” என்ற குரலுக்கு பின் இது வழிவகுத்தது.








