பள்ளிகளை தரம் உயர்த்த RM15.75 மில்லியன் ஒதுக்கீடு-மலாக்கா கல்வித்துறை

மலாக்கா:

லாக்கா மாநிலத்தில் உள்ள 225 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் கழிவறைகளை மேம்படுத்தவும், சிறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கல்வி அமைச்சகத்திடம் இருந்து மலாக்கா மாநிலக் கல்வித் துறை RM15.7 மில்லியன் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 12 வரை எட்டு வாரங்களுக்குள் 215 பள்ளிகளில் கழிப்பறைகளை மேம்படுத்தும் பணியை திணைக்களம் முடித்துள்ளது என்றும் அதன் இயக்குனர் முகமது கசாலி அகமட் கூறினார்.

“பள்ளி மேம்படுத்துதலுக்காக அங்கீகரிக்கப்பட்ட RM70,000 மதிப்பிலான பணிகளில் 10 மட்டுமே இறுதி கட்டத்தில் உள்ளன. குறித்த திட்டம் விரைவில் முடிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் பள்ளிகளிடம் இருந்து எந்த புகாரும் எமது துறைக்கு வரவில்லை என்றார்.

மொத்த ஒதுக்கீட்டில், மத்திய மலாக்காவில் உள்ள 88 பள்ளிகளில் தரம் உயர்த்தும் பணிகளைச் செயல்படுத்த 6.16 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது, அவற்றில் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பணிகளில், கழிப்பறைகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல், புனரமைப்பு மற்றும் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்துதல், மீள் வயரிங் பணி மற்றும் மின் சாதனங்களை மாற்றுதல், கழிப்பறை உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் வாங்குதல் மற்றும் பிற பராமரிப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்றும் முகமட் கசாலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here