பிகேஆரின் தலைவர்கள் மலாய்க்காரர்கள்- ஆனால் மற்ற இனங்களை ஓரங்கட்ட மாட்டார்கள் என்கிறார் அன்வார்

புத்ராஜெயா: பிகேஆர் அதன் முக்கிய தலைமை மலாய்க்காரர்களாக இருந்தாலும் பிற இனங்களின் தேவைகளை ஓரங்கட்டிவிடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பிகேஆர் தலைவர் மலாய்க்காரர் அல்லாத பிரச்சனைகள் தொடர்பான கவலைகளை குறிப்பிட்டார். மேலும் கட்சியின் தலைமை நியாயமாக செயல்படும் என்றார். மற்ற இனங்களின் பிரச்சனைகள் கையாளப்படவில்லை என்ற புகார்கள் உள்ளன. ஆனால் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு நியாயமாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

நேற்றிரவு புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில், நாங்கள் இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறினார். அதே சமயம், அனைத்து இன மக்களும் இந்த மகத்தான தேசத்தின் அங்கமாக உணர வேண்டும் என்றார் அன்வார். மற்ற இனங்களின் கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நம்பாவிட்டால் இந்த தேசம் ‘பாதுகாப்பாக’ இருக்காது என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிகேஆர் பிரதிநிதி ஒருவர் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் சீன அல்லது இந்தியத் தலைவர்களை நிர்வாக உறுப்பினர்கள் பதவிகளுக்கு பரிந்துரைக்காததால் கட்சியின் மலாய் அல்லாத உறுப்பினர்களிடையே அதிருப்தி இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்ட அவர்கள்,  பிகேஆர் கட்சி அதன் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களின் பங்கைப் பற்றி விவாதிக்கும் என்று நம்புவதாகக் கூறினர்.

பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு மத்தியில், “மிதமான” அணுகுமுறை மாற்றத்திற்கு முக்கியமானது என்று அன்வார் கூறினார். நாம் இடது மற்றும் வலதுபுறத்தில் இருந்து தள்ளப்பட்டாலும் – நாங்கள் மெதுவாக இருக்கிறோம் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். மற்றொரு தரப்பினர் நாங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் இல்லை என்று கூறுகிறார்கள் – அனைவரின் நலன்களையும் மனதில் வைத்து நாம் மிதமான, நடுத்தர அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

ஆட்சியில் நிர்வாகத்தின் முந்தைய அனுபவங்களை கவனத்தில் கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். நாமும் ஒற்றுமை அரசாங்கமும் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாத் துறைகளிலும் மாற்றம் வேண்டும் என்று அதிக அழுத்தம் கொடுப்பதும் சரியல்ல என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here