காசா போர் நிறுத்தத்தின் 2-ம் நாள் : 14 பிணைக்கைதிகள் – 42 சிறைக்கைதிகள் விடுவிப்பு

ஸ்ரேல் காசா இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தின் இரண்டாம் நாளில், பரஸ்பரம் மேலும் பல சிறைக்கைதி – பிணைக்கைதி விடுவிப்புகள் அரங்கேறுகின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரின் 7வது வாரத்தில் சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போர் ஒப்பந்தங்களின் அடுத்தக்கட்டமாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பரஸ்பரம் கைதிகள் விடுவிப்புகள் அரங்கேறி வருகின்றன.
முதல் நாளில் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்கள் வசமிருக்கும் பிணைக் கைதிகளை விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் ஆயுதக் குழு தெரிவித்தது. இதனையடுத்து, போர் நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று, இஸ்ரேல் தரப்பில் கல்வீச்சு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்ட 15 சிறுவா்கள் மற்றும் 24 பெண்கள் என 39 பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
பதிலுக்கு 25 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இவர்களில் 13 பேர் இஸ்ரேலியர்கள்; 12 பேர் தாய்லாந்து நாட்டவர். செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 13 இஸ்ரேலியா்கள், எகிப்து வழியாக இஸ்ரேல் திரும்பினா். காசாவைவிட்டு ராஃபா எல்லை வழியாக வெளியேறிய தாய்லாந்து நாட்டவா்கள், ஹட்செரிம் விமானப் படைத்தளம் மூலம் இஸ்ரேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவர்களை தாய்லாந்துக்கு அழைத்துச்செல்ல அந்நாட்டு அதிகாரிகள் இஸ்ரேல் விரைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here