கோல க்ராய்: திங்கள்கிழமை (நவம்பர் 27) அதிகாலை ஜாலான் குவா மூசாங்- கோல க்ராயில் உள்ள வங்கியின் முன் தனது பெற்றோருடன் சென்ற கார் விளக்குக் கம்பத்தில் மோதி தீப்பிடித்ததில் ஏழு மாத பெண் குழந்தை கருகி இறந்தது. வான் சபீனா அரிஷா வான் ஷாரிசாத் என்ற குழந்தையின் எரிந்த உடல் குடும்ப காருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும், தந்தை வான் ஷாரிசாத் அஸ்வான் வான் ஷாரில் 28, கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும், கோலாக்ராய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பொறுப்பாளர் முகமட் ஃபட்சில் மூசா தெரிவித்தார்.
அதிகாலை 4.04 மணிக்கு விபத்து குறித்து எங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது. குழந்தையின் கருகிய உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சிறு காயங்களுக்கு ஆளான தந்தை மற்றும் தாயார் நூர் ஹசிதா ரஸ்மி, 25, இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.









