புக்கிட் செலம்பாவ் கிடங்கு தீ விபத்து: சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் பாதுகாப்பானதாக உள்ளது

அலோர் ஸ்டார்:

டந்த ஞாயிற்றுக்கிழமை இரசாயனங்கள் அடங்கிய மூன்று மறுசுழற்சிக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, புக்கிட் செலாம்பாவைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றின் தரம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிந்தைய தொடர் மழை காரணமாக மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்த அது உதவியது என்று, கெடா சுற்றுச்சூழல் துறையின் (DoE) இயக்குனர் ஷரிபா ஜக்கியா சையட் சாஹப் கூறினார்.

இருப்பினும், தீயினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதி இன்னும் ஒப்பீட்டளவில் அதிக மாசுபாடு உள்ளதாகவே காட்டுவதாக அவர் கூறினார்.

“இப்போதைக்கு, அந்த பகுதியில் இன்னும் அதிக அளவு மாசுபாடுகள் காணப்படுவதாகவும், அப்பகுதியில் நுழைவதற்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here