புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல். சூர்யா, கார்த்தி நிதியுதவி-ரசிகர்கள் பாராட்டு

சென்னை:

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சூர்யாவும், கார்த்தியும் 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள்.வங்கக்கடலில் கடந்த 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. புயலுக்கு மிக்ஜாம் என்று பெயர் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் புயலானது நிலைகொண்டிருந்தது.

இதன் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. கடுமையான மழையின் காரணமாக நகரத்தில் தண்ணீரும் தேங்கியது. தி.நகர் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வடபழனி முருகன் கோயில் குளம்,அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின. பள்ளிக்கரணையில் வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

நேற்று காலையிலிருந்து ஒரு நிமிடம்கூட விடாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுக ளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களை அவதிக்குள்ளாக்கியது. உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்ததால் போர்க்கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மேற்கொண்டு மக்கள் பீதிய டைந்தனர். இந்த மழை 2015ஆம் ஆண்டைவிட மோசமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க நேற்று இரவே சென்னையிலிருந்து விலகி ஆந்திரா நோக்கி சென்றது. இதனால் சென்னையில் படிப்படியாக மழையின் அளவு குறைந்திருக்கிறது. புயலானது ஆந்திரா மற்றும் சூலூர்பேட்டைக்கு இடையே இன்று முற்பகல் கரையை கடக்கவிருக்கிறது.

இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட் டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 4000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந் துள்ளன. வெளி மாவட்டங்களிலிருந்து தூய்மை பணியாளர்கள் அழைக்கப்பட் டிருக்கிறார்கள். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற் காக சூர்யாவும், கார்த்தியும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கின்றனர். மேலும் தங்களது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அத்தி யாவசிய பொருட்களையும் வழங்கவிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here