20 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டு உணவு விற்பனையாளர் கொலை!

ஜார்ஜ்டவுன்:

ஜாலான் ஓய் தியாம் சியூ, தாமான் கான்டினென்டல், ஜெலுதோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடப் பகுதியில், நெஞ்சு, கழுத்து மற்றும் வயிற்றில் 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டதில் உணவு விற்பனையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட, 60 வயதான Teh Teik Chye என்பவர், பினாங்கு மருத்துவமனையில் (HPP) சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று, வடகிழக்கு மாவட்ட காவல்துறை பதில் தலைவர் சரவணன் தெரிவித்தார்.

நேற்று மாலை 6.18 மணிக்கு அப்பகுதியில் சண்டை நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றும், பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதாக நம்பப்படும் 27 காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்ட் மற்றும் பாதுகாவலர் அறையிலுள்ளCCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு ஆண் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது, அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

“பாதிக்கப்பட்டவர் ஜாலான் பேராக் பொதுச் சந்தையில் பொருளாதார உணவு விற்பவர் என்றும், அவர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் என்றும், அவருக்கு குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்” என்றும் கூறிய அவர், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302 பிரிவின் படி விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here