கோலாலம்பூர்:
நேற்று செவ்வாய் கிழமை மதியம் 12.30 மணி முதல் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவர் காணாமல் போனது குறித்து அவரது தாயார் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
“படத்தில் இருப்பது போல் கருப்பு வெள்ளை நிறமுள்ள பள்ளி சீருடையணிந்திருந்த என் மகனை யாராவது பார்த்தால் உதவுங்கள், நேற்று மதியம் முதல் என் மகன் காணவில்லை என்றும், அவர் ஊனமுற்றவன், ஆட்டிஸம் உள்ளவர், அவரால் பேச முடியாது. அவரைப் பார்த்தால் முதலில் அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள், பிறகு எனக்கு போன் செய்யுங்கள்” என்று அப்பதிவில் தெரிவித்தியிருந்தார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் புகாரைப் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், காணாமல்போன சிறுவன் தொடர்பாக ஏதேனும் தகவல் உள்ளவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தினையோ, பெட்டாலிங் ஜெயா IPDக்கு நேரடியாகவோ அல்லது 03-79662222 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறும் அவர் கூறினார்.




















