நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து பிரீமியர் லீக் ஆட்டத்தில் லிவர்புல் அணி 0-2 என்ற கோல்கணக்கில் ஷேப்ஃபீல்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டம் ஷேப்ஃபீல்ட் யுனைட்டெட் அணி அரங்கில் நடை பெற்றது. அதன் 37 ஆவது நிமிடத்தில் வான் டேக் லிவர்புல் அணிக்கான முதல் கோலை புகுத்தினர். அதனை தொடர்ந்து கோல் புகுத்த இரு அணிகளும் பல முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை.
ஆட்டம் 0-1 என்ற கோல்கனக்கில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கூடுதல் நேரத்தில் ஸோபோஸ்லாய் லிவர்புல் அணிக்கான 2ஆவது கோலை புகுத்தினார்.
லிவர்புல் அணி இந்தத் தவணை பிரிமியர் லீக் போட்டியில் இதுவரை 15 ஆட்டங்களில் களம் இறங்கியுள்ளது. அதில் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 ஆட்டங்களில் சமநிலை கண்டு ஓர் ஆட்டத்தில் தோல்வி அடைந்து அவ்வணி பட்டியலில் 34 புள்ளிகளை வைத்துள்ளது.
அதேசமயம் ஷேப்ஃபீல்ட் யுனைட்டெட் அணி பட்டியலில் 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.