டிக்டாக் மூலம் பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்கிறார் சிவக்குமார்

Massimo ரொட்டியை உற்பத்தி செய்யும் இத்தாலிய பேக்கர் நிறுவனத்திற்கு எதிராக (The Italian Baker Sdn Bhd) டிக்டாக் மூலம் பரப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறப்பானவை என்று மனிதவள அமைச்சின் மனிதவள ஆள்பல இலாகா (JABATAN TENAGA KERJA SEMENANJUNG MALAYSIA) மூலம் நடத்தப்பட்ட முழு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த முழு விசாரணை அறிக்கையை மனிதவள அமைச்சர்  வ. சிவக்குமாருக்கு மனிதவள ஆள்பல இலாகா அனுப்பி வைத்துள்ளது. கடந்த 4.12.2023 தேதி ஒரு பெண்மணி பதிவேற்றம் செய்த டிக்டாக் வீடியோ தொடர்பாக மனிதவள ஆள்பல இலாகா புகாரைப் பெற்றது. தமிழ் மொழியில் பதவியேற்றம் செய்யப்பட்ட அந்த டிக்டாக் விடியோவில் தாம் இந்தியர் என்பதால் Massimo ரொட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை வழங்க மறுத்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் உள்ள பேக்கர் நிறுவனத்திற்கு எதிராக 6.12.2023 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தொழிற்சாலை மொத்தம் 471 பணியாளர்களுடன் செயல்படுகிறது. இதில் உள்ளூர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 200 பேர். மலாய்க்காரர்கள் 165 பேர், சீனர்கள் 21 பேர், இந்தியர்கள் 14 பேர். மற்றவர்கள் நேப்பாளம்,வங்காள தேசம், மியான்மார் தொழிலாளர்கள் ஆவர்.

ஆனால்,  இந்த தொழிற்சாலையில் வேலை செய்ய இந்தியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று டிக்டாக்கில் வீடியோ வைரலானது. இதை பதிவேற்றிய கணக்கு வைத்திருப்பவர் ஷெர்லின் ஆவார். இந்த நிறுவனத்தின் பெயரில் தவறான விளம்பரங்கள் குறித்து மாசிமோ தொழிற்சாலை நிறுவனம் அதே நாளில் மறுப்பும் தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்த நிறுவனம் ஒரு போலீஸ் புகாரும் செய்துள்ளது.

மேலும், மலேசிய தகவல் தொடர்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த “மோசடி செய்பவர்” மூலம் இந்த விளம்பரம் திட்டமிடப்பட்டது. மேலும் இந்த விளம்பரம் வைரலாவதற்கு முன்பே சபா மற்றும் சரவாக்கில் பரவத் தொடங்கியது. மனிதவள ஆள்பல இலாகா மேற்கொண்ட முழு விசாரணையில் இந்த தொழிற்சாலை நிறுவனம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துள்ளது என்பதை நிரூபிக்கிறது. டிக்டாக் வீடியோ மூலம் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்று விசாரிணை முடிவில் தெரிய வந்திருப்பதாக மனிதவள ஆள்பல இலாகா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here