2023 இல் வசூலில் 600 கோடி கடந்து சாதனை படைத்த 5 படங்கள்

‎இந்த ஆண்டு இந்திய சினிமாவில் தெரிந்த கதையை வேறுபட்ட கோணத்தில் கையாண்டு சில படங்களை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்துள்ளனர். இந்த ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய பெரும்பான்மையான படங்கள் அனைத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தந்தை மகன்  பிணைப்பு. ஆனால் இவை 600 கோடியை கடந்து 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது என்பது மிகப்பெரும் சாதனையே.

பதான்:
யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த்ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடித்திருந்தனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக இந்தியாவை தாக்க வரும் பாகிஸ்தான் உளவாளியான ஜான் ஆபிரகாமை, இந்திய “ரா” உளவாளியான ஷாருக்கான் வெல்வதே கதை. உலக அளவில் இப்படம் 1052.85 கோடி வசூல் செய்துள்ளது.

ஜவான்: தமிழில் நன்கு பரீட்சையப்பட்ட ராஜா ராணி புகழ் அட்லி பாலிவுட் சென்று கமர்சியல் பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும் அதே சமயம் நாயகன் சமூகப் பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஷாருக்கான் மூலம் டெலிவரி செய்ததே ஜவான். அப்பா,மகன் என இரு வேடங்களில் நடித்து அசத்தி  இருந்தார்.உலக அளவில் ஜவான் சுமார் 1000 கோடி தொட்டு சாதனை படைத்தது.

ஜெயிலர்: பீஸ்ட்டின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பின் நெல்சன் எடுக்க தயங்கிய படம் ஜெயிலர். இதன் வெற்றியோ தமிழ் சினிமாவை உலக அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த ஜெயிலர் உலக அளவில்  கிட்டத்தட்ட 650 கோடியை பெற்று சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த அன்பை பெற்று மீண்டும் தன்னை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிரூபித்தார் தலைவர்.

கதர் 2: தந்தையை தேடி இந்திய எல்லை தாண்டிவரும் பாசமிகு தனயனை பாகிஸ்தான் ஆர்மி இடமிருந்து காப்பாற்றுவதே நாயகனின் வேலையாக இருந்தது. உலக அளவில் கதர்2  கிட்டத்தட்ட 691 கோடி வசூலில் சாதித்தது. அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல் மற்றும்அமிஷா பட்டேல் நடித்திருந்தனர்.

அனிமல்: இந்த ஆண்டு இறுதியில் ரன்பீர்கபூரின் நடிப்பில் வெளிவந்த அனிமல். வெளிவந்த சில நாட்களிலேயே 600 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது தன் குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போக தயாராகும் பாசமிகு மகனின் ஆக்ரோஷமான கதை. சில நாட்களே ஆன நிலையில் இப்படத்தின் வசூல் 600 கோடியை  கடந்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here