அயோப்பின் கூற்றுகளை விசாரிக்க சுயாதீன குழுவை அமையுங்கள்: சார்லஸ் கோரிக்கை

போலீஸ் படையின் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சையை வீழ்த்துவதற்கான சதித்திட்டத்தின் சமீபத்திய கூற்றுகள் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம்  ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சண்டியாகோ கோரிக்கை விடுத்தார்.

Dang Wangi போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயாவை வீழ்த்துவதற்கு “சில பகுதியினர்” அயோப்பின் கூற்றுக்களை விசாரிக்க போலீஸ் படைக்கு வெளியே உள்ளவர்கள் குழுவில் இருக்க வேண்டும் என்று சண்டியாகோ கூறினார்.

இல்லையெனில், இந்த (இரண்டு) தோழர்கள் எப்போதும் கறைபடிந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் முதலாளிகள் ‘ஆம், நாங்கள் வெளிப்படையாக விசாரித்தோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னால் தெளிவான விளக்கமாக இருக்காது என்று அவர எப்ஃஎம்டியிடம் கூறினார். போலீசார் தங்களை விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என்பதால் சுயேட்சை குழு ஒன்று தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

வியாழன் அன்று ஒரு நிகழ்ச்சியில் அயோப் கூறுகையில்,   தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக கூறினார். ஆனால் எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் கூறவில்லை. ஆனால் விசாரணைகளை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here