தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

 

கோலாலம்பூர், டிச. 13-

தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் 33ஆவது விளையாட்டுப் போட்டி கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கொம்ப்ளெக்ஸ் சுக்கான் செத்தியா வங்சா அரங்கில் நடைபெற்றது.

மொத்தம் 250 மாணவர்கள், 17 ஆசிரியர்கள், பெற்றோர் என 350 பேர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டியைமாணவர்கள நாட்டின் இந்நாள் ஓட்டப்பந்தய வீரர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

பள்ளி நிர்வாகம், பள்ளி பெற்றோர் –  ஆசிரியர் சங்கம், மேலாளர் வாரியம், பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து இந்த விளையாட்டுப் போட்டியை முதன் முறையாக ஒரு பிரமாண்ட அரங்கத்தில் நடத்தி இருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

பாலர்பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் காலை, மதிய உணவு வழங்கப்பட்டது. மைலோ குளிர்பானமும் அருந்தி மகிழ்ந்தனர்.. இந்த 33 ஆண்டில் முதன் முறையாக ஒரு விளையாட்டு அரங்கத்தில் இவ்விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது, மாணவர்கள ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள், பிரமுகர்கள் மத்தியில்  ஒரு புதிய எழுச்சியைக் காண முடிந்தது.

பள்ளியின்  முன்னாள் மாணவர் சங்கமும் அளப்பரிய பங்கை ஆற்றியது. இவர்கள்  விளையாட்டுப் போட்டிக்கான டி சட்டைகளை இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய தலைமையாசிரியர் குணசேகரன் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்த பள்ளிச் சிற்றுண்டிச் சாலை தகுதிச் சான்றிதழ் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here