வொர்செஸ்டர்ஷைர் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் காலமானார்

சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் நேற்று அறிவித்துள்ளது. ஜோஷ் பேக்கர் இறப்புக்கான

காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ், பேக்கர் காலமான செய்தி ‘நம் அனைவரையும் பேரழிவிற்கு

ஆளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

பேக்கர் 2021-ம் ஆண்டு வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடத் தொடங்கியபோது தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சர்வதேச சுற்றுகளில் அவர் 19

வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here