ஈப்போவில் 42 வயது மனநலம் குன்றிய ஆடவரின் சடலம், காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, சித்தியவான் அருகே உள்ள வாய்க்காலில் இன்று மிதந்துள்ளது. மஞ்சோங் காவல்துறைத் தலைவர் நோர்டின் அப்துல்லா கூறுகையில், பாதிக்கப்பட்டவர் 4 மீட்டர் ஆழமுள்ள வடிகாலில் சிக்கிக் கொண்டு முகம் குப்புறக் கிடந்தார்.
பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது மஞ்சோங் செயல்பாட்டு அறையை 05-688 6222 என்ற எண்ணில் அழைக்குமாறு கேட்டு கொண்டார்.