தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீர் ராக்கெட் தயாரிப்புப் போட்டி

 

செ. குணாளன்

 

பிறை, டிச.16

தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 2023 நீர் ராக்கெட் தயாரிப்புப் போட்டியில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 25 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்ட நிலையில் பிஜேஎஸ் -1 தமிழ்ப்பள்ளி சாம்பியன் கிண்ணத்தை வென்றது.

இந்தப் போட்டியை பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிக்கான  வெற்றிக் கிண்ணத்தை  தன் சொந்தச் செலவில் வாங்கித் தந்தார்.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகிய 7 மாநிலங்களில் இருந்து 25 தமிழ்ப்பள்ளிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இரண்டாவது நிலையில் பிறை தமிழ்ப்பள்ளி, 3ஆவது நிலையில் பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி,  4ஆவது நிலையில் கெடா பீடோங் தமிழ்ப்பள்ளி, 5ஆவது நிலையில் மலாக்கா, நிபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவை வெற்றி பெற்றன.

வான்குடைத் தயாரிப்புப் போட்டியில் சிலாங்கூரைச் சேர்ந்த பிஜேஎஸ் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றிபெற்ற நிலையில் கெடா, பீடோங் தமிழ்ப்பள்ளி 2ஆவது நிலையிலும் மலாக்கா தெபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3ஆவது நிலையிலும் மலாக்கா அலோர்காஜா தமிழ்ப்பள்ளி 4ஆவது நிலையிலும் கெடா பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 5ஆவது நிலையிலும் வெற்றிபெற்றன.

இலக்கவியல் போட்டியில் பினாங்கு பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி முதல் பரிசை வென்றது. பிறை தமிழ்ப்பள்ளி 2ஆவது நிலையிலும் சிலாங்கூர் புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி 3ஆவது நிலையிலும் சிலாங்கூர் பிஜேஎஸ் 1 தமிழ்ப்பள்ளி 4ஆவது நிலையிலும் மலாக்கா மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி 5ஆவது நிலையிலும் வாகை சூடின.

விண்ணைத் தொடும் அறிவியல் போட்டியானது  ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளியின் அறிவியல் வெற்றி என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் பாராட்டினார். இது நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்குமான ஒரு மாபெரும் வெற்றியாகும் என்று அவர்  சொன்னார்.

நம்முடைய தமிழ்ப்பள்ளிகளைச் ஙே்ர்ந்த நம் மாணவர்களின் அறிவியல் சாதனைகள் வியக்க வைக்கின்றன. இவர்களுக்கு சரியான ஆக்கமும் ஊக்கமும் தரப்பட்டால் நாளைய விஞ்ஞானிகள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. வெற்றிக் கோப்பை என்பது ஒருவருக்கு  அல்லது ஒரு பள்ளிக்கு என்றாலும்  சாதனை என்பது அனைவருக்குமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நீர் ராக்கெட் பாய்ச்சீம் போட்டி நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மேஜர் டத்தோ காளீஸ்வரன், பெற்றோர் – ஆசிரியர் ங்ங்கத் தலைவர் ஏஎஸ்பி வீ. குமார், உலகநாதன், பினாங்கு கல்வி இலாகா துணை இயக்குநர் ஆ. சக்திவேல், தலைமையாசிரியர் ஆ. வாசுகி, செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் பொன்னுதுரை, பெற்றோர், போட்டியில் பங்கேற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here