தமிழ் சினிமாவில் மனதை வருடும் ஏராளமான பாடல்கள் உள்ளது, அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகியாக இருப்பவர் தான் சித்ரா. பல்வேறு மொழிகளில் 25,000க்கும் அதிகமான பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார். தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார், அவர் சினிமா துறைக்குள் நுழைந்து 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி என பல மொழிகளில் பாடியுள்ளார். சினிமாவில் தனது இனிமையா குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவரது வாழ்க்கையில் மிகவும் சோகமான விஷயம் நடந்தது. 2011ம் ஆண்டு சித்ரா, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஒன்றில் பாட துபாய் சென்றிருந்த போது அவரின் மகள் ஹோட்டல் அறையில் மூழ்கி உயிரிழந்தார்.
தனது மகளின் பிறந்தநாளான இன்று ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார் பாடகி சித்ரா. அதில் அவர், நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.