அம்பாங் ஜெயா:
ஜாலான் உத்தாமா கம்போங் லெம்பா ஜெயா உத்தாராவில் விழுந்து கிடந்த மரத்தில் வாகனம் மோதியதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.
பிற்பகல் 3.51 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் அம்பாங் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு பிற்பகல் 3.51 மணிக்கு அறிக்கை கிடைத்தது என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
உயிரிழந்த இருவரும் உள்ளூர் ஆண்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது அத்துடன் விசாரணை தொடர்கிறது.









