ஜோகூர் பாரு:
வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குறிவைத்து போலியான வேலை அனுமதிப் புதுப்பித்தல் மோசடிகளில் பல மாதங்களாக செற்பட்டுவந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
26 வயதான அவர் தனது செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவதற்காக, மலேசிய நிறுவனங்கள் பதிவுசெய்யும் ஆணையத்தில் (SSM) பதிவுசெய்த குடிநுழைவு விஷயங்களில் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவினார்.
இருப்பினும், நேற்று (டிசம்பர் 19) Ops Serkap நடவடிக்கையின்போது, தம்போயில் மதியம் 1.55 மணியளவில் குடிநுழைவு துறை அவரையும் அவரது இரு தொழிலாளர்களையும் கைது செய்ததாக ஜோகூர் குடி நுழைவுதுறை இயக்குனர் பஹாருடின் தாஹிர் கூறினார்.
அவர்களில் பிரதான சந்தேக நபர் இங்குள்ள தனியார் நிறுவனமொன்றின் தலைவர் எனக் கூறினார்.
சந்தேக நபர்கள் குடிநுழைவு சட்டம் 1959/63 பிரிவு 6(1)(c), பிரிவு 12(1)(f) பாஸ்போர்ட் சட்டம் 166 (சட்டம் 150), குடிவரவு சட்டம் 1959/63 பிரிவு 55E (சட்டம் 150) மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 56(1A)(c) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“RTK 2.0 திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோரை பதிவு செய்ய எங்கள் சார்பாக செயல்படுவதற்கு குடிவரவுத் திணைக்களம் ஒருபோதும் மூன்றாம் தரப்பினரையோ அல்லது முகவரையோ நியமிக்கவில்லை என்பதை பொதுமக்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.








