அத்துமீறி நுழைந்த படகு: 4 வியட்நாம் மீனவர்கள் கைது

கோல தெரங்கானு: மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) நான்கு வியட்நாம் மீனவர்களை கைது செய்ததுடன், நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக ஒரு படகையும் கைப்பற்றியது. கோல தெரெங்கானுவில் இருந்து 133 கடல் மைல் தொலைவில் மதியம் 12.30 மணியளவில் படகு கைப்பற்றப்பட்டதாக தெரெங்கானு எம்எம்இஏ இயக்குநர் கடல்சார் கேப்டன் முகமட் கைருலனுார் அப்துல் மஜித் தெரிவித்தார்.

மேலும், 3.5 டன் கடல் மீன்கள், 2,000 லிட்டர் டீசல் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 1.5 மில்லியன் ரிங்கிட் ஆகும். எங்கள் ரோந்துக் குழு Op Naga Barat  சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படகைக் கண்டோம்.

29 முதல் 61 வயதுக்குட்பட்ட ஒரு கேப்டன் உட்பட அனைத்து வெளிநாட்டு மீனவர்களிடமும் செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஏதும் இல்லை என முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கைக்காக MMEA ஜெட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து குழு உறுப்பினர்களும் COVID-19 ஸ்கிரீனிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக முகமட் கைருலனுார் கூறினார். இந்த வழக்கு மீன்பிடி சட்டம் 1985 மற்றும் குடிநுழைவு சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here