RM197,230 மதிப்புள்ள யாபா மாத்திரைகள் பறிமுதல்- இருவர் கைது

கோத்தா பாரு:

ஜாலான் சலோரின் கம்போங் பெண்டெக் பத்து 5, ஜாலான் சலோரில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகே நேற்று போலீசார் நடத்திய சோதனையில் RM197,230 மதிப்புள்ள 32,000 யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.

மாலை 5 மணியளவில் நடந்த சோதனையில், 36 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் Perodua MyVi ரக காரில் இருந்து இறங்கியவுடன் கைது செய்யப்பட்டனர் என்று மாநில துணை காவல்துறை துணை ஆணையர் முகமட்அலி டாம்பி கூறினார்.

முதலில் அவர்கள் பயணித்த காரை ஆய்வு செய்ததில் 2,000 யாபா மாத்திரைகள் அடங்கிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சந்தேக நபர்களில் ஒருவரின் விசாரணையின் அடிப்படையில் போலீசார் பாசீர் மாஸிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

“வீட்டில் உள்ள ஒரு அறையை ஆய்வு செய்ததில் ஒரு டிராயரில் ஐந்து பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 30,000 யாபா மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

இந்நிலையில் சந்தேகத்திற்குரிய இருவரின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையானது போதைப்பொருளுக்கு எதிர்மறையானது என்றும், எவ்வாறாயினும், சந்தேகநபர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான இரண்டு முந்தைய குற்றவியல் பதிவுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் இருவரும் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here