அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த ஆடவர் போலீஸ்காரரால் கொல்லப்பட்டாரா? உண்மையில்லை என்கிறது குற்ற புலனாய்வுத் துறை

செராஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இறந்து கிடந்த ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொன்றதாக சமூக ஊடகங்களில் கூறப்பட்டதை போலீசார் மறுத்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் அப்துல் ஜலீல் ஹசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. அவர் அடுக்குமாடி குடியிருப்பின் 20ஆவது மாடியில் இருந்து விழுந்தார்.

20ஆவது மாடியில் இருந்து வெளியேறும் முன் அந்த நபர் தனியாக மின்தூக்கி (லிப்டில்) நுழைவதை  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமிரா காட்டுவதாக அவர் கூறினார். 20 ஆவது மாடியில் ஒரு மதுபான கேன் மற்றும் முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் கூறப்பட்டபடி, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்டார் என்பதை போலீசார் மறுக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

தவறான நடவடிக்கை கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்  அடுக்குமாடியின் 20ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

இது குறித்த எந்த கருத்துகளையும் ஊகிக்க வேண்டாம் என்று நான் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறேன். சாட்சிகளின் கூற்றுப்படி, தனிமையில் வாழ்ந்த அந்த நபர், திருமண பிரச்சனை காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி தனது மனைவி வெளியேறியதால் மன அழுத்தத்தில் இருந்ததாக ஜலீல் மேலும் கூறினார்.

உள்ளூர் நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து வியாழன் இரவு 8.05 மணியளவில் போலீசாருக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்த சலாக் செலாத்தான் போலீஸ் நிலையத்தின் குழுவினர் அந்த நபரை மயக்கமடைந்த நிலையில் கண்டதாகவும் அவர் கூறினார்.

சென்சிலர்  துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here