வெள்ளம்: நாட்டில் மொத்தம் 18,735 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

நாட்டில் வெள்ள நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. அந்தவகையில் கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் மொத்தம் 18,735 பேர் அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதுநேரத்தில், நெகிரி செம்பிலானில் வெள்ளம் முற்றாக வடிந்ததைத் தொடர்ந்து நீலாய், லெங்கெங், SK சுங்கை மச்சாங்கில் இயங்கிவந்த நிவாரண மையம் நேற்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது.

நேற்று நள்ளிரவு தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (நட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய பேரிடர் அறிக்கையின்படி, நாட்டில் மொத்தமாக 199 தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பட்டுவருவதாக அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here