மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு மியன்மார் ஆடவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறை

கோலா திரெங்கானு:

மூன்று ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இரண்டு மியன்மார் நாட்டு ஆண்களுக்கு, கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

26 வயதான அக்ரமுல்லா ஜமால் ஹுசைன் மற்றும் 39 வயதான ஷுனாமியா அப்துல் சலாம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு இன்று வாசிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரது குற்றமும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி நூரியா ஒஸ்மான் இந்த முடிவை எடுத்தார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர்கள் இருவரும் சம்பவத்தின் போது 23 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

11 நவம்பர் 2020 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில், உலு திரெங்கானுவில் உள்ள கம்போங் மெர்பாவ் பூலாஸில் உள்ள ஒரு வீட்டில் அக்ரமுல்லா மற்றும் ஷுனாமியா ஆகியோர் இந்த அருவருப்பான செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் குற்றச்சாட்டிற்காக, அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 (B) இன் படி குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், அவர்கள் கைது செய்யப்பட்ட தேதியில் அதாவது 2020 நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை தொடங்க உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here