மித்ராவை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுங்கள்; கிள்ளான் MP அரசாங்கத்திடம் கோரிக்கை

 மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவை (மித்ரா) அதன் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சட்டப்பூர்வ அமைப்பாக மாற்ற வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி கணபதிராவ் முன்மொழிந்துள்ளார். சட்டப்பூர்வ அமைப்பாக, இந்த பிரிவு மித்ரா வாரியத்திற்கும் பிரதமருக்கும் நேரடியாக அறிக்கை அளிக்கும் என்று கணபதிராவ் கூறினார்.

மித்ராவை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக ஆக்குவது, நிதி அறிக்கைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகளை நிர்வகிப்பதில் அதன் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும்.

மித்ராவின் அனைத்து செயல்பாடுகளும் இந்த வாரியத்தால் கண்காணிக்கப்படும். இதில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள் உள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மித்ரா மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் கீழ் அமர்த்தப்படுவார் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது. இது முன்பு பிரதமர் துறையின் மேற்பார்வையில் இருந்தது.

இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான சிறப்புப் பிரிவைத் தொடர்ந்து கண்காணிப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியளித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here