கூச்சிங்:
இரண்டு நாட்களுக்கு முன்பு சரவாக்கில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி அறிவித்தபடி, சரவாக்கிற்கு கூடுதல் டீசல் விநியோகம் கிடைத்துள்ளது.
இப்போது சரவாக் முழுவதும் கூடுதல் டீசல் விநியோகிக்கப்படுகிறது என்று சரவாக் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) தலைமை அமலாக்க அதிகாரி பீட்டர் ஜே பெரினஸ் அகாங் கூறினார்.
இருப்பினும், டீசல் விநியோகம் தொடர்பில் இன்னும் தகவல்களைச் சேகரித்து வருவதால், டீசலின் அளவு தொடர்பில் அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் KPDN அதிகாரிகள் எரிவாயு நிலையங்களின் உண்மையான டீசல் இருப்பு தொடர்பில் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.








