வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22,033 ஆகக் குறைந்தது

கோலாலம்பூர்:

கிளந்தான், திரெங்கானு, ஜோகூர் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,033 ஆகக் குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்றிரவு 23,008 பேராக பதிவாகியிருந்தது. அங்கு நேற்று 103 நிவாரண மையங்கள் இயங்கிவந்த நிலையில், தற்போது 92 தற்காலிக நிவாரண மையங்கள் இயங்கிவருகின்றன.

இருப்பினும், பஹாங்கில் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேரில் இருந்து தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து 227 பேராக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here