சீனாவிலிருந்து நேரடி விமான சேவையை பெற பேராக் அரசு முயற்சி

ஈப்போ:

Visit Perak Year 2024 என்ற பேராக்கின் சுற்றுலா ஆண்டை மேம்படுத்துவதற்கு சீனாவிலிருந்து நேரடி விமானங்களைப் பெற மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

சீனாவிலிருந்து பேராக்கிற்கு நேரடி விமானங்கள் இல்லாததன் காரணமாக , அங்கிருந்து வரும் பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் சவாலாக உள்ளது. ஏனெனில் முந்தைய ஆண்டுகளில் சீனாவிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பேராக்கிற்கு வருகைபுரிந்துள்ளனர் என்று மாநில சுற்றுலாக் குழுத் தலைவர் லோ ஸி யீ கூறினார்.

“சீனாவிலிருந்து சில நேரடி விமான சேவைகளைப் பெற முயற்சிக்கிறோம். சீனாவிலிருந்து நேரடி பார்வையாளர்களைப் பெறுவது சவாலாக உள்ளது, ”என்று அவர் நேற்று மாநில செயலக கட்டிடத்தில் நடந்த Perak GoGoGo வலைத்தளத்தின் தொடக்க நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து நேரடி விமானங்களில் வந்தவர்கள் உட்பட வெளிநாட்டிலிருந்து 350,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்தாண்டு நாங்கள் பெற்றுள்ளோம், ஆனால் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

சீன சந்தையை குறிவைக்கும் வகையில், Perak GoGoGo இணையதளம் சீன மொழியில் உள்ள உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது பேராக் மாநிலத்தை விளம்பரப்படுத்துவதுடன், சீனாவிலிருந்து பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும் என்று லோ கூறினார்.

மேலும் இந்த வலைத்தளத்தில் “ மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பல விளம்பர உள்ளடக்கங்கள் உள்ளன. சீனா, ஹாங்காங், தைவான் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக பார்வையாளர்களை ஈர்க்க இந்த இணையதளம் உதவும்,” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here