BDSக்கு எதிராக அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தது McDonald’s நிறுவனம்

கோலாலம்பூர்:

McDonald’s Malaysia நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதாக BDS Malaysia மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

McDonald’s Malaysia இலிருந்து தாங்கள் சம்மன்களைப் பெற்றதாகவும், காசாவிற்கு எதிரான போருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தங்கள் வணிகங்களை புறக்கணிக்குமாறும், தடை செய்யுமாறும் அரசு சாரா அமைப்பான BDS Malaysia பிரச்சாரம் செய்ததாக கூறி, குற்றம் சுமத்தியுள்ளனர் என்று BDS அமைப்பு X சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

அதில் “இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்,இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

“எங்கள் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, விரிவான அறிக்கையை வெளியிடுவோம்” என்று அவர்கள் அப்பதிவில் தெரிவித்துள்ளனர்.

BDS மலேசியா என்பது ஒரு பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும், இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு உடந்தையாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் அமைப்புகளைப் புறக்கணிக்க மலேசியப் பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

McDonald’s தவிர, KFC மற்றும் ஃபேஷன் பிராண்ட் ஜாரா போன்ற பல வீட்டுப் பெயர்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here