கடலலை தாக்கியதில் இடிந்த வீடு ; கோலா திரெங்கானுவில் சம்பவம்

கோலா திரெங்கானு:

த்து ராகிட்டின் கம்போங் மெங்காபாங் தேலோங்கில்,கடல் அலைகள் வேகமாக தாக்கியதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக அவ்வீட்டில் இருந்த வயதான தம்பதிகள் உட்பட ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருப்பதாலும், அங்கு உயர் அலைகளின் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதாலும் குறித்த குடும்பத்தினர் இன்னும் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று, குடிமைத் தற்காப்புப் படைகளின் செயல்பாட்டு பேரிடர் மேலாண்மைப் பிரிவு துணை இயக்குநர் மேஜர் (PA) முகமட் ஹபீஸ் அசிகின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here